

சென்னை,
சென்னையில் நடிகை நமீதாவும், அவரது கணவர் வீராவும் இணைந்து புதிய நடிப்பு பயிற்சி பள்ளியை தொடங்கியுள்ளனர். இந்த பயிற்சி பள்ளியின் துவக்க விழாவில் நடிகரும், பா.ஜ.க. நிர்வாகியுமான சரத்குமார் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எனவே நடிகர்களும் அரசியலுக்கு வரலாம், ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அரசியலிலும் நடிக்கக் கூடாது. அங்கு உண்மையாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வருபவர்களின் தகுதி, அவர்கள் பேசும் விஷயங்கள், அவர்கள் என்ன செய்வதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்? அதை செயல்படுத்தும் திறமை அவர்களுக்கு உள்ளதா? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்கள் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது.
இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.