குற்றாலம் மெயின் அருவியில் ரீல்ஸ் வெளியிட்டு நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உற்சாகம்

குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரித்தது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவிக்கு குளிக்க வந்த நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் ஆகியோர் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், அருவிக்கரையில் இடுப்பில் துண்டு கட்டி நின்றவாறு கிங்காங், ‘எனக்கு தண்ணீரைக் கண்டாலே அலர்ஜி’ என்று கூறியவாறு குளிக்க மறுக்கிறார். உடனே முத்துக்காளை குண்டுக்கட்டாக கிங்காங்கை தூக்கி சென்று அருவியில் குளிக்க வைத்து கலகலப்பூட்டுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
Related Tags :
Next Story






