பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும் - தமிழக அரசு


பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை செயல்படும் - தமிழக அரசு
x

தைப்பூசத்தையொட்டி நாளை அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் பொது விடுமுறை தினமான நாளை (செவ்வாய் கிழமை) தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே முந்தைய ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story