விஜய்யுடன் கூட்டணியா? - ஓ.பன்னீர்செல்வம் பதில்


விஜய்யுடன் கூட்டணியா? - ஓ.பன்னீர்செல்வம் பதில்
x

கோப்புப்படம் 

விஜய் பிரசாரத்திற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பது தேவையில்லாதது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மதுரை

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு அண்ணாமலை அழைப்பு விடுத்தால் அதில் சேருவேனா? இல்லையா? என்பது குறித்த கேள்விக்கு தற்சமயம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பிரிந்து சென்றவர்கள் வந்தால் மீண்டும் இணைத்துக்கொள்வோம் என வைகைச்செல்வன் கூறியிருக்கிறார். அவருக்கு, கூட்டணி குறித்து பேசுவதற்கு அதிகாரம் உள்ளதா?

தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. அதற்குள் பிரசாரம் பற்றி அவசரப்பட வேண்டாம். விஜய் பிரசாரத்திற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பது தேவையில்லாதது. தி.மு.க.தான் எதிரி என விஜய் கூறுவதற்கு, தி.மு.க.தான் பதில் சொல்ல வேண்டும். அதுபோல், அ.தி.மு.க.வை பற்றி பேசாமல் இருப்பது பற்றியும் விஜய்தான் விளக்க வேண்டும். விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. அதை மறுக்க முடியாது. ஆனால் அது ஓட்டுகளாக மாறுமா? என்பதை தேர்தலில் பதிவான வாக்குகளை வைத்துதான் சொல்ல முடியும். விஜய்யுடன் கூட்டணியா? என கேட்கிறார்கள். அது வதந்தியாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story