குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருநாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது .மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






