‘அ.ம.மு.க. வேட்பாளர்கள் இந்த முறை உறுதியாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்’ - டி.டி.வி.தினகரன்


‘அ.ம.மு.க. வேட்பாளர்கள் இந்த முறை உறுதியாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்’ - டி.டி.வி.தினகரன்
x

கூட்டணிக்கு வர வேண்டும் என்று முக்கிய கட்சிகள் அ.ம.மு.க.வை அணுகி அழைப்பது உண்மை என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“2021 சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை நாங்கள் தீர்மானித்தோம். நாங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்தோமோ அவர்கள் வரவில்லை. தற்போது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கடின உழைப்பால் சுமார் 200 தொகுதிகளில் அ.ம.மு.க.வின் கட்டமைப்பு பலமாக இருக்கிறது.

கூட்டணிக்கு வர வேண்டும் என்று முக்கிய கட்சிகள் அ.ம.மு.க.வை அணுகி அழைப்பது உண்மை. நாங்கள் யார் வரக்கூடாது என்பதற்காக போராடினோம். ஆனால் எங்களால் சட்டமன்றத்திற்கு செல்ல முடியவில்லை. ஆனால் இந்த முறை அ.ம.மு.க. வேட்பாளர்கள் உறுதியாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story