திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு அம்ரித்பாரத் ரெயில்-மோடி நாளை தொடங்கி வைக்கிறார்


திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு அம்ரித்பாரத் ரெயில்-மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
x

இந்த ரெயிலில் 11 பொதுப்பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

மதுரை,

தென்னக ரெயில்வேயில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு வாராந்திர அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்கவிழா நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) திருவனந்தபுரத்தில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடக்கிறது.

அன்றைய தினம் காலை சுமார் 10.45 மணிக்கு ரெயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் (வ.எண்.06122) திருவனந்தபுரத்தில் இருந்து குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயில் அன்றையதினம் மாலை சுமார் 3.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலில் 11 பொதுப்பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மேற்குவங்க மாநிலம் நியூஜல்பைகுரி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒரு அம்ரித்பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story