அண்ணாமலை பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் போராட்டம்: அரசு தீர்வு காண வேண்டும் - மு. வீரபாண்டியன்

போராட்டத்தை தமிழக அரசும், உயர்கல்வித்துறை அமைச்சரும் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் போராட்டம்: அரசு தீர்வு காண வேண்டும் - மு. வீரபாண்டியன்
Published on

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அண்ணாமலை பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் கூட்டமைப்பு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி வழங்க வேண்டிய ஊதியத்தில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தவணைத் தொகை, முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு ஊக்கத் தொகை போன்றவைகள் வழங்கப்பட வேண்டும். ஒப்பந்த பணியில் உள்ளவர்களை நிரந்தரம் செய்வது, காலிப் பணியிடங்களில் புதிய பணி நியமனம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வரும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசும், உயர்கல்வித்துறை அமைச்சரும் நேரடியாக தலையிட்டு விரைந்து சுமூக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com