திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்ததற்கு எதிராக மேல் முறையீடு

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மலையானது முருகன் கோவில் நிர்வாகச்சொத்து. முஸ்லிம் ஆட்சியாளர்களாலோ, ஆங்கிலேய அரசாங்கத்தாலோ மலையின் மீதான, திருப்பரங்குன்றம் கோவில் தேவஸ்தானத்தின் உரிமை பறிக்கப்படவில்லை. குறிப்பிட்ட இடத்தை தவிர மலை மற்றும் சுற்றுப்பகுதிகள் அனைத்தும் தேவஸ்தானத்தின் வசம் இருந்தன. இந்த மலையில் இருந்து கற்கள் வெட்டி எடுக்க முயன்றபோது இந்துக்கள் கடுமையாக எதிர்த்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.
கோவில் மரபுகளை கடைப்பிடிக்கும் கடமை தேவஸ்தானத்திற்கு உள்ளது. அந்த வகையில் மலையின் மேல் விளக்கேற்றும் பாரம்பரியத்தையும் தேவஸ்தானம் கடைபிடிக்க வேண்டும். விளக்கு ஏற்றுவது புனிதமான செயல். மலையின் மீது உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்றுவதன் மூலம் தர்காவின் அமைப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது. தர்காவில் இருந்து 50 மீட்டருக்கும் குறையாத தூரத்தில்தான் தீபத்தூண் உள்ளது.
தீபத்தூணில் விளக்கு ஏற்றாவிட்டால் கோவில் உரிமைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது இந்த ஆண்டு முதல் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்துவதில் யாருடைய தலையீடும் இல்லை என்பதை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உறுதி செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாகம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் தரப்பில் செயல் அலுவலர் சந்திரசேகர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.






