28 சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு நியமன ஆணை - அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்

11 அரசு சார்புச் செயலாளர்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
சென்னை,
28 சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு (Law Interns) பயிற்சிக்கான நியமன ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (17.12.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 28 சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கான நியமன ஆணை வழங்கினார்.
மேலும், எந்த நேரத்திலும், இருந்த இடத்தில் இருந்தவாரே, தங்களது பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக சட்டத்துறையில் பணியாற்றும் 11 அரசு சார்புச் செயலாளர்களுக்கு 11 மடிக்கணினிகளையும் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு செயலாளர் சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், கூடுதல் செயலாளர்கள் முனைவர் கு.மகேஷ் குமார், ப.அன்புச் சோழன் மற்றும் சட்டத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






