'கரண்ட் பில்' அதிகமாக வருகிறதா.? - மின் சிக்கனத்துக்கான 10 வழிகள்!

மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்திக்கொள்ள 10 வழிமுறைகளை மின்வார வாரியம் வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டுக்கு முன்பு 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், 2022-ம் ஆண்டு மின்சார வாரியம் ரூ.1.59 லட்சம் கோடி கடனில் தத்தளித்ததால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2027-ம் ஆண்டுவரை ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
என்னதான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின் பயன்பாடு என்பது குறைந்தபாடில்லை. அதுவும் கோடை காலத்தில் புதிய உச்சத்தை எட்டிவிடுகிறது. இந்த நிலையில், மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்திக்கொள்ள 10 வழிமுறைகளை மின்வார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-
1. தேவையில்லாத நேரங்களில் மின்சாதனங்களை அணைத்து விட வேண்டும்.
2. மின் விளக்குகளுக்கு பதிலாக எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்தலாம்.
3. இயற்கை வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
4. மின்விசிறி, ஏசி, பிரிட்ஜ் போன்ற சாதனங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
5. பயன்பாடு இல்லாத மின்சாதனங்களை பிளக்-அவுட் செய்ய வேண்டும்.
6. ஏசி பயன்பாட்டை குறைத்து, 24–26 டிகிரி செல்சியஸ் அளவில் வைத்திருக்க வேண்டும்.
7. மின்சாரத்தை அதிகம் சேமிக்கும் சாதனங்களை தேர்வு செய்ய வேண்டும்.
8. சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
9. ஒரே அறையில் அதிக மின்சாதனங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
10. மின் சிக்கனம் குறித்து குடும்பத்தினருக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.






