ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: தொழிலாளி கைது

மதுபோதையில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.
ஈரோடு,
ஈரோடு காவிரி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தினார். போலீஸ் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடியே கண்காணிப்பு கேமரா காட்சிகளை நேரடியாக ஆய்வு செய்து கொண்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் அந்த நபர் ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரத்தை உடைக்க முயன்றதாக தெரிகிறது.
உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கேசவன் (வயது 22) என்பதும், மதுபோதையில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






