அய்யா வைகுண்டர் அவதார தினம்: மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை


அய்யா வைகுண்டர் அவதார தினம்: மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 20 Feb 2025 8:56 PM IST (Updated: 20 Feb 2025 8:56 PM IST)
t-max-icont-min-icon

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம் வருகிற 4-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

திருநெல்வேலி

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவர் வழியை பின்பற்றும் மக்கள், அவரை சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக கருதி வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் அவரை வழிபட்டு வருகின்றனர்.

வைகுண்டரின் பிறந்த தினத்தன்று, அவரை வழிபடும் மக்கள், அந்தந்த பகுதிகளில் ஊர்வலம் செல்வது வழக்கம். அவரின் அவதார தினத்தைக் கொண்டாடும் வகையிலும், பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும் தென் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், அய்யா வைகுண்டரின் 193-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 4ஆம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையாக விடப்படுவதாக இரு மாவட்டங்களின் கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் (மார்ச் 15) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேற்படி (மார்ச் 04) உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்பட உள்ள அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story