பாபர் மசூதி இடிப்பு தினம்: தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை

பொதுமக்கள் ரெயிலில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்று வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பாபர் மசூதி இடிப்பு தினம்: தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை
Published on

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாபர் மசூதி பிரச்சினைக்கு கோர்ட்டு மூலம் ஏற்கனவே தீர்வு காணப்பட்ட நிலையிலும், தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் தலைமையில், இருப்புப் பாதை காவலர் செல்வம் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

பயணிகளின் உடைமைகள், ரெயில் நிலையம் மற்றும் ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் ரெயிலில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்று வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் திரளான போலீசார் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com