‘பா.ஜ.க. தற்போது புதிய அடிமைகளை தேடி வருகிறது’ - உதயநிதி ஸ்டாலின்

கடைசி தி.மு.க. தொண்டர் இருக்கும் வரை தமிழ்நாடு பாசிசத்தை எதிர்க்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ஜ.க. தற்போது புதிய அடிமைகளை தேடி வருகிறது என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-
“புதிய கல்விக் கொள்கை மூலம் சமஸ்கிருதம் மற்றும் சாதி அடிப்படையிலான கல்வியை திணிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆனால் தமிழ்நாடு அதை உறுதியாக எதிர்க்கும். அ.தி.மு.க.வின் ஆதரவுடன் பா.ஜ.க. எந்த விலை கொடுத்தாவது தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று வந்துள்ளது. இப்போது, பா.ஜ.க. புதிய அடிமைகளை தேடி வருகிறது. நான் யாரை குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, கவர்னர் ஆர்.என்.ரவி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார். தமிழ்நாடு யாருக்கு எதிராக போராடுகிறது? என்று அவர் கேட்கிறார். நான்கு ஆண்டுகளாக, தமிழ்நாடு அவருக்கு எதிராக போராடி வருகிறது. நாங்கள் தொடர்ந்து போராடி வெற்றி பெறுவோம். கடைசி தி.மு.க. தொண்டர் இருக்கும் வரை தமிழ்நாடு பாசிசத்தை எதிர்க்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






