தமிழகத்தில் 2-வது பெரியகட்சியாக வர பா.ஜனதா முயற்சி செய்கிறது-திருமாவளவன்

பா.ஜ.க.வின் கொள்கையை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று திருமாவளவன் கூறினார்.
ஆலந்தூர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர், திடீ ரெனபதவி விலகி இருப் பது அதிர்ச்சி அளிப்பதோடு, இது பெரும் அரசியல் சதி என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. அவரை கட்டாயப் படுத்தி, கையெழுத்து பெற் றதாக வலுவான சந்தேகம், எழுந்துள்ளது. எனவே உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை யில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். பா.ஜனதா, கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி, அவர்கள் முதுகில் சவாரி செய்து, மாநிலங்களில் காலூ ன்றி வருகிறது. அதே உத்தியை தமிழ்நாட்டிலும் பா.ஜனதா கடைப்பிடித்து வருகிறது.
தி.மு.க.வை ஆட்சி அதிகா ரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை விட, அ.தி.மு. க.வை பலவீனப்படுத்தி, தமிழ்நாட்டில் 2-வது பெரிய கட்சியாக வருவதற்கு பா.ஜனதா முயற்சி செய்கி றது. அ.தி.மு.க.வை பயன் படுத்தி இங்கே வளர துடிக்கின்றனர்.
தி.மு.க. கூட்டணியில் இருப்பதால்தான் பா.ஜக, அ.தி.மு.க.வை விமர்சிக்கி றோம் என்று சிலர் கருது கின்றனர். கூட்டணியில் இருந்தாலும் இல்லா விட்டாலும், பா.ஜ.க.வின் கொள்கையை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம். பா.ஜ.க.வை ஏற்கனவே விமர்சிக்கிறோம், தொடர்ந்து விமர்சிப்போம். அண்ணாமலை, தலைவர் பதவியில் இருந்து அப்புறப் படுத்தப்பட்டு விட்டார். ஆனாலும் அதை மறந்து விட்டு, ஊடகத்தின் கவ னத்தை ஈர்ப்பதற்காக, அவர் ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






