கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. சம்மன்: புஸ்சி ஆனந்த் இன்று விசாரணைக்கு ஆஜர்?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூர்,
கரூரில் கடந்த மாதம் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதில், அவர்கள் இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) கரூரில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதையடுத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






