புதுக்கோட்டை நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு


புதுக்கோட்டை நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு
x

மழை குறைந்ததால் நெல்லின் ஈரப்பதம் சற்று குறைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை உலர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் கொள்முதல் பணிகள் தாமதமடைந்துள்ளன. மத்திய அரசு விதிகளின்படி நெல்மணிகளின் ஈரப்பதம் 17 சதவீதத்தை மீறக்கூடாது என்ற நிபந்தனையுடன் தற்போது கொள்முதல் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டுகளில் மழைக்காலங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியது. அந்த வகையில், தற்போது பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு 22 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய குழுவைச் சேர்ந்த அதிகாரி மணிகண்டன், “மத்திய குழு ஆய்வை விவசாயிகள் திருப்திகரமாக பார்க்கின்றனர். மழை குறைந்ததால் நெல்லின் ஈரப்பதம் சற்று குறைந்துள்ளது. நெல் மாதிரிகளை ஆய்வு செய்த பின்னர் முடிவுகள் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story