சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே தகவல்

திருவள்ளூரில் இருந்து காலை 5.55 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில், கடம்பத்தூர், திருவளங்காடு ரெயில் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை(10.08.2025) காலை 7.30 மணி வரை மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரெயில், சென்ட்ரலில் இருந்து காலை 5.30 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரெயில், திருவள்ளூரில் இருந்து காலை 5.55 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் ரெயில் வழித்தடத்தில் இயக்கப்பட இருப்பதால் ஆவடியில் இருந்து காலை 6.20 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரெயில், சென்ட்ரலில் இருந்து காலை 6 மணிக்கு திருத்தணி புறப்படும் ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து 5.40 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரெயில், சென்டிரலில் இருந்து 6.30 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய நிலையங்களில் நிற்காது.
மேலும், கடம்பத்தூரில் இருந்து காலை 6.15 மணிக்கு சென்டிரல் செல்லும் மின்சார ரெயில், திருத்தணியில் இருந்து 5.30 மணிக்கு சென்டிரல் வரும் ரெயில், திருவள்ளூரில் இருந்து காலை 6.50 மற்றும் 7 மணிக்கு சென்டிரல் வரும் ரெயில், அரக்கோணத்தில் இருந்து 6.20, 6.40 மணிக்கு சென்டிரல் செல்லும் ரெயில், திருத்தணியில் இருந்து காலை 6.30, 7.10-க்கு சென்டிரல் செல்லும் மின்சார ரெயில்கள் புட்லூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆகிய நிறுத்தங்களில் நிற்காது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடம்பத்தூர், திருவளங்காடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. இதனால், திருவள்ளூரில் இருந்து இரவு 9.55 மற்றும் 10.15 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டது. சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு மேல் புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம் சென்ற 7 மின்சார ரெயில்கள் பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய நிறுத்தங்களில் நிற்காமல் சென்றது. ரெயில் சேவை மாற்றம் குறித்து முன்கூட்டிய தெற்கு ரெயில்வே தகவல் தெரிவிக்காததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.






