பராமரிப்பு பணியால் ரெயில் சேவையில் மாற்றம்


பராமரிப்பு பணியால் ரெயில் சேவையில் மாற்றம்
x

கோப்புப்படம்

திருவனந்தபுரம் ரெயில் நிலைய பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்,

திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் ஒரு பாதையை மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குறிப்பிட்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படும் சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்.12695) ரெயில் இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற ஆகஸ்டு 8-ந்தேதி வரை சென்னையில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்திற்கு காலை 7.40 மணிக்கு வந்தடையும்.

திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ்(12696) நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் மாலை திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story