கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 19 Aug 2025 9:25 PM IST (Updated: 19 Aug 2025 9:49 PM IST)
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை

துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேபோல், இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியான சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் கமல்ஹாசன், செல்வப்பெருந்தகை, வேல்முருகன், காதர் மொய்தீன், வைகோ, திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், ஈஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின்போது, துணை ஜனாதிபதி தேர்தல் , கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதேவேளை, இந்த ஆலோசனைக்குப்பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 50வது திருமணநாளையொட்டி கூட்டணி கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

1 More update

Next Story