கோவை: சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து - பெண்கள் இருவர் பலி


கோவை: சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து - பெண்கள் இருவர் பலி
x
தினத்தந்தி 17 Aug 2025 3:28 PM IST (Updated: 17 Aug 2025 5:01 PM IST)
t-max-icont-min-icon

அதிகாலை நேரத்தில் தூக்க கலக்கத்துடன் காரை இயக்கியதால், விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கோவை,

கோவை மாவட்டம் வாளையாறு பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனிடையே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 3 வயது குழந்தை உட்பட 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நேரத்தில் தூக்க கலக்கத்துடன் காரை இயக்கியதால், விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story