கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்


கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2025 8:46 PM IST (Updated: 27 Nov 2025 9:16 PM IST)
t-max-icont-min-icon

சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் வரும் 29.11. 2025 சனிக்கிழமை, காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகச் செயலாளர் எம்.ஆர்.ரகுநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காரல் மார்க்சுக்கு எதிரான அவதூறு கருத்துக்களையும், வெறுப்பையும் தொடர்ந்து கக்கி வரும் கவனர் ஆர்.என்.ரவி-யை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 29 காலை - சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெறுகிறது

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சித்தாந்தத்தால் வளர்க்கப்பட்ட தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்சுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். அரசியல் சட்ட ரீதியான கவர்னர் பதவியை வகிக்கிறோம் என்ற பொறுப்புணர்வு கூட இல்லாமல் கவர்னர், உலகம் போற்றும் மாபெரும் அறிஞர் காரல் மார்க்ஸை இழிவு படுத்திவருகிறார்.

கவர்னர் ஆர்.என்.ரவியின் இந்த அடாவடிப் போக்கை கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் வரும் 29.11. 2025 சனிக்கிழமை, காலை 10 மணிக்கு நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் தலைமை தாங்குகிறார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் வரதன், வட சென்னை மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சீனிவாசன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வஹிதா நிஜாம், கவர்னர் ஆர்.என்.ரவி-யை கண்டித்து, கண்டன உரையாற்றுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story