தொடர் மழை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை


தொடர் மழை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
x

தொடர் மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை (அக்.17) முதல் வரும் 21ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் நீர்வரத்து குறைந்த பின்னரே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story