‘பொய் வழக்கால் வேலை கிடைக்கவில்லை..’ - மனுதாரருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு

சரத்குமார் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு தஞ்சையை சேர்ந்த சரத்குமார் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், இந்த பொய் வழக்கால் கடந்த 8 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் தவித்து வருவதாகவும் கூறி மதுரை ஐகோர்ட்டு கிளையில் சரத்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி, 2017-ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை 2025-ம் ஆண்டில் தான் கோர்ட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார். மேலும், சரத்குமார் மீது பதியப்பட்டது பொய் வழக்கு என்று கூறி, அந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரருக்கு அரசு சார்பில் 3 மாதத்தில் ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.






