கடலூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் பலி - முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு


கடலூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் பலி - முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
x

கோப்புப்படம்

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பெரியகுமட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (15.06.2025) காலை சுமார் 11.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புவனகிரி வட்டம், சின்னக்குமட்டி கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்த லதாகுமாரி (வயது 37) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story