டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு -பொதுமக்கள் கடும் அவதி


டெல்லியில்  காற்று மாசுபாடு அதிகரிப்பு -பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 21 Oct 2025 6:49 AM IST (Updated: 21 Oct 2025 1:53 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்ததன் காரணமாக டெல்லியில் தீவிர காற்று மாசுபாடு ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

புதுடெல்லி,

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பிராந்திய பகுதிகளில் காற்று மாசுபாடு மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த பிரச்சினை காரணமாக தலைநகரில் கடந்த 7 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி கேட்டு் பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த ஆண்டு டெல்லியில் தீபாவளியன்றும், அதற்கு முன்தினமும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்தது. காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 8 முதல் 10 மணி வரையும் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி தீபாவளி பண்டிகையான நேற்றும், நேற்று முன்தினமும் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.இதனால் தலைநகரின் காற்று மாசுபாடு மீண்டும் அதிகரித்தது. தலைநகரில் உள்ள 38 காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் 31-ல் காற்று மாசு மிகவும் அபாய அளவை எட்டியிருந்தது கண்டறியப்பட்டது.காலையில் 339 ஆக இருந்த மாசுபாடு அளவு (ஏ.கியூ.ஐ), நண்பகலில் 334 ஆகவும் இருந்தது. அதேநேரம் ஆனந்த் விகார்(402), வாசிர்பூர்(423), அசோக் விகார்(414) ஆகிய 3 மையங்களில் மிகவும் மோசமான அளவை எட்டி இருந்தது.

இது வரும் நாட்களில் மேலும் மோசமடையக்கூடும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஏ.கியூ.ஐ. அளவு 0 முதல் 50 வரை இருப்பதே சிறப்பான அளவாக கருதப்படுகிறது. ஆனால் தலைநகரில் பல இடங்களில் 400-க்கு மேல் ஏ.கியூ.ஐ. பதிவாகி இருப்பது அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.இந்த காற்று மாசுபாட்டால் டெல்லிவாசிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.இதைத்தொடர்ந்து காற்று மாசுபாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையிலான நடவடிக்கைகளை மக்கள் எடுக்குமாறு முதல்-மந்திரி ரேகா குப்தா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

குறிப்பாக தீபாவளிக்கு பசுமைப்பட்டாசுகளை மட்டுமே வெடிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டு உள்ளார். தீபங்கள் ஏற்றியும், ரங்கோலி கோலமிட்டும், இனிப்புகளை பரிமாறியும பாரம்பரிய முறையில் பண்டிகையை கொண்டாடுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

1 More update

Next Story