துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் - போலீசார் விசாரணை

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

டி.ஜி.பி. அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக தினமும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நேற்று வந்த மின்னஞ்சலில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அதில் தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மகன் இன்பநிதி ஆகிய இருவரையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக கொலையாளிகளை வேலைக்கு அமர்த்தி உள்ளோம். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் ரூ.10 கோடி கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். இந்த கடிதத்தை தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து அதிரடி விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல சினிமா இயக்குனர் சங்கர், நடன இயக்குனர் கலா, நடிகர் பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் ஆகியோரின் வீடுகளுக்கும் மிரட்டல் விடுத்து கடிதம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com