திருவண்ணாமலை அருகே டீசல் லாரி கவிழ்ந்து விபத்து - மூதாட்டி பலி

லாரி கவிழ்ந்ததையடுத்து கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர்.
திருவண்ணாமலை,
சென்னையில் இருந்து திருவண்ணாமலை அருகே 16ஆயிரம் லிட்டர் கொள்ளளவு டீசல் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, திருவண்ணாமலை அடுத்த அரசம்பட்டில் லாரி வருவதை கவனிக்காத மூதாட்டி கனகாம்பரம் (70) என்பவர் சாலையை கடக்க முயன்றார். மூதாட்டி மீது லாரி மோதாமல் இருக்க திருப்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது.
இதில் மூதாட்டி கனகாம்பரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசல் ஆறாக ஓடியதால், கிராம மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர். இந்த விபத்தால் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story






