கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 5,308 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33 சதவீதம், கருணை தொகையாக 11.67 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 5,308 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
Published on

சென்னை,

சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 2024-25-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33 சதவீதமும், கருணைத் தொகையாக 1.67 சதவீதம் என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது.

ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33 சதவீதம், கருணை தொகையாக 11.67 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் உள்ள சுமார் 5 ஆயிரத்து 308 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.3 கோடியே 53 லட்சத்து 37 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com