திமுகவின் ஊழல்தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கிறது - ஆதவ் அர்ஜுனா


திமுகவின் ஊழல்தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கிறது - ஆதவ் அர்ஜுனா
x

“பாஜகவுடன் எந்தக் காலத்திலும் தவெக கூட்டணி அமைக்காது என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெகவின் தேர்தல் மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது: "பேசி வளர்ந்த திமுக கட்சியில் பேச ஆளில்லை. அதனால் ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளனர். பெரியார், அண்ணாவின் கொள்கைகளை திமுக என்றைக்கோ விட்டுவிட்டது.

திமுகவின் ஊழல்களால் பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. திமுகவை எதிர்க்கும் தவெக, அதிமுகவை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்கிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, சாதாரண குடிமகனாக இருந்த விஜய், பாஜகவுக்கு ஆதரவாக இருந்த அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு, நீட் போராட்டம் என ஒரு சாதாரண குடிமகனாக அதிமுக ஆட்சியை எதிர்த்து வந்தார் . திமுகவின் கொள்ளை ஆட்சியை எதிர்த்த எம்ஜிஆர், பாஜகவை எதிர்த்த ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளோடு தவெக செயல்பட்டு வருவதால், அதிமுக தொண்டர்கள் என்றைக்கோ, திமுகவில் சேர்ந்துவிட்டனர். பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது" என்று பேசினார்.

1 More update

Next Story