2025-26 இன் இரண்டாம் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக உயர்வு - நயினார் நாகேந்திரன்

பிரதமர் போன்ற ஒரு சிந்தனையாளர் நமக்குக் கிடைத்தது நமது பூர்வ ஜென்ம புண்ணியமே என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த செப்டம்பர் மாதத்தில் 7% அல்லது அதிகபட்சம் 7.5% வரை மட்டுமே உயரும் எனப் பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்பட்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP), 2025-26 இன் இரண்டாம் காலாண்டில் எதிர்பாராத அளவிற்கு 8.2% உயர்ந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி மட்டுமன்றி பெருமைக்குரிய முன்னேற்றமுமாகும்.
இதற்கான எல்லாப் புகழும் தொழிற்துறைக்குப் பல நலத்திட்டங்களை வாரி வழங்கிய நமது பாரதப் பிரதமர் மோடியையே சாரும். நான் பலமுறை கூறியுள்ளதைப் போல நமது பாரதத்தின் வளர்ச்சியையும், தற்சார்புப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தி, நம்மை உலக அரங்கில் முன்னிலைப்படுத்த அயராது உழைத்து வரும் நமது பாரதப் பிரதமர் போன்ற ஒரு சிந்தனையாளர் நமக்குக் கிடைத்தது நமது பூர்வ ஜென்ம புண்ணியமே!
ஜெய்ஹிந்த்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






