கண்துடைப்புக்காக ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் குறைத்த திராவிட மாடல் - நயினார் நாகேந்திரன் சாடல்


கண்துடைப்புக்காக ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் குறைத்த திராவிட மாடல் - நயினார் நாகேந்திரன் சாடல்
x

கோப்புப்படம் 

முன்னரே திட்டமிட்டு கட்டணத்தை நெறிபடுத்தாதது திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தீபாவளியை முன்னிட்டு தலைநகரிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நான்கு மடங்காக உள்ளதை எதிர்த்து மக்கள் குரல் எழுப்பியவுடன், காலங்கடந்து கட்டணத்தைக் குறைத்துள்ளது திமுக அரசு. இதனால் யாருக்கு என்ன பயன்?

போதிய அரசுப் பேருந்துகள் இல்லாததால், கூடுதல் தொகை என்று அறிந்தும், வேறு வழியின்றி ஒரு மாதத்திற்கு முன்பே ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் புக் செய்திருந்த பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்குத் தற்போது இழப்பீடு வழங்க முடியுமா என்ன?

நான்கரை ஆண்டு ஆட்சிக்காலத்தில், ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், ஒருமுறை கூட முன்னரே திட்டமிட்டுத் தானாக முன்வந்து கட்டணத்தை நெறிபடுத்தாதது திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது.

காலந்தாழ்ந்து கட்டணத்தைக் குறைப்பது மக்கள் குறையைத் தீர்த்தது போன்ற பாவ்லா காட்டுவதற்கா? அல்லது ஆம்னி பேருந்துகளிடம் கமிஷன் பெற்று கல்லா கட்டுவதற்காகவா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுகிறது. எது உண்மையென்று பதில் சொல்லுங்கள், முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story