பைக் சீட்டிற்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பு - பார்த்ததும் பதறிய வாலிபர்

பைக்கில் இருந்த பாம்பை அதே சாலையில் வந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிச்சி அடைந்தனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சாலையில் அருண் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கின் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பை கண்டு பதறிப்போனார். பின்னர் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பைக்கின் சீட்டை அப்புறப்படுத்திய தீயணைப்புத்துறையினர் சில நிமிடங்கள் போராடி பாம்பை பத்திரமாக பிடித்தனர்.
இந்த சம்பவத்தை அதே சாலையில் வந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






