காபி தூள் பாக்கெட்டில் கடத்தப்பட்ட ரூ.47 கோடி மதிப்பிலான போதைப்பொருள் - மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காபி தூள் பாக்கெட்டில் கடத்தப்பட்ட ரூ.47 கோடி மதிப்பிலான போதைப்பொருள் - மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்
Published on

மும்பை,

கொழும்புவில் இருந்து மும்பை வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகள் கொழும்புவில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது ஒரு பெண் பயணியின் உடைமைகளில் இருந்து 4.7 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த போதைப்பொருள் காபி தூள் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளது. அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.4.7 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போதைப்பொருளை கடத்தி வந்த பெண், அவரிடம் இருந்து போதைப்பொருளை வாங்க விமான நிலையத்திற்கு வந்த நபர் மற்றும், இவர்களுக்கு உதவி செய்த 3 பேர் என மொத்தம் 5 பேரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com