வால்பாறையில் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்

வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் இன்று இ-பாஸ் பெற்றே வந்தனர்.
கோவை,
வால்பாறையில் குற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் இ-பாஸ் நடைமுறையை கடைபிடிக்க கோர்ட்டு உத்தாவிட்டது. இதையடுத்து இன்று முதல் வால்பாறையில் இ-பாய் நடைமுறைக்கு வந்தது. https://www.tnepass.tn.gov.in/home இணையதளம் வாயிலாக இ-பாஸ் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதையடுத்து, வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் இன்று இ-பாஸ் பெற்றே வந்தனர்.
ஆழியார் வனத்துறை சோதனை சாவடி, சோலையார் அணை இடதுகரை சோதனை சாவடி என 2 இடங்களில் வருவாய்த் துறை, உள்ளாட்சித்துறை, வனத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இ-பாஸ் பெறாத வாகனங்களுக்கு சோதனை சாவடிகளிலேயே இ-பாஸ் பதிவு செய்து கொடுப்பதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதன்மூலம் அவர்களுக்கு இ-பாஸ் பதிவு செய்து கொடுத்து வால்பாறைக்கு அனுப்பி வைத்தனர்.






