‘கல்வியே நமது இனத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படை’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


‘கல்வியே நமது இனத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படை’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

தமிழகத்திற்கு வருகை தரும் தெலுங்கானா முதல்-மந்திரியை பாசத்துடன் வரவேற்கிறோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாளை நடைபெறும் ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களின் 2025-26 கல்வி ஆண்டிற்கான தொடக்க விழா குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“கல்வியே நமது இனத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படை எனச் செயலாற்றி வரும் நமது திராவிட மாடல் அரசு, நாளை நடத்தவுள்ள கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக்கு வருகை தரும் அன்புச் சகோதரர், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியை பாசத்துடன் வரவேற்கிறோம்!

நமது அரசின் சாதனைத் திட்டங்களான புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் விரிவாக்கமும் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மாணவச் செல்வங்களின் முகங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story