நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 30 காசுகள் சரிவு

முட்டை நுகர்வு குறைந்ததே விலை குறைய காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 30 காசுகள் சரிவு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 560 காசுகளாக இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 530 காசுகளாக குறைந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் மேலும் 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர்.

எனவே முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக சரிவடைந்து உள்ளது. தைப்பூசம் நெருங்கி வருவதால் பொதுமக்கள் இடையே முட்டை நுகர்வு குறைந்து உள்ளது. இதுவே விலை குறைய காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கறிக்கோழி கிலோ ரூ.152-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.82-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com