முண்டியடித்த ரசிகர்கள்; தடுமாறிய விஜய்..சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு


முண்டியடித்த ரசிகர்கள்; தடுமாறிய விஜய்..சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Dec 2025 9:12 PM IST (Updated: 28 Dec 2025 9:13 PM IST)
t-max-icont-min-icon

விஜய் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகரும் தவெக தலைவருமான விஜய் , இன்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த விஜய்யை காண அவரது ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு இருந்தனர்.

விஜய் வருகை தரும் போது அவரை பார்க்கும் ஆர்வத்தில் முண்டியடித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், விஜய் சற்று தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விஜய்யை சுற்றி இருந்த காவலர்கள் அவரை மீட்டு, காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். உடனடியாக விஜய் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story