வடகிழக்கு பருவமழை தண்ணீரை சேமிக்க ஏரிகள், குளங்களை தூர்வார வேண்டும்: விவசாய சங்கம் வலியுறுத்தல்


வடகிழக்கு பருவமழை தண்ணீரை சேமிக்க ஏரிகள், குளங்களை தூர்வார வேண்டும்: விவசாய சங்கம் வலியுறுத்தல்
x

தண்ணீரை சேமித்து வைத்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டத்தை காப்பாற்ற முடியும் என்று விவசாய சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சென்னை,

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ. விசுவநாதன் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழை பெய்து ஏரிகள், சிறு பாசன குளங்கள், கிணறுகள், கணிசமான எண்ணிக்கையிலேயே நிரம்பி வழிகிறது. இதில் 25 சதவீத ஏரிகள் மற்றும் குளங்களில் 50 சதவீதத்திற்கு மேல் நிரம்புவதில்லை. இதற்கு காரணம் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன ஏரிகள் மற்றும் பஞ்சாயத்து குளங்கள் ஆகியவைகளின் வரத்து வாய்க்கால்கள் அக்கிரமிப்பு செய்யப்பட்டு தூர்வாரப்படாமலேயே இருக்கிறது.

மேலும் வடிகால் வசதி இல்லாமல் விவசாய நிலங்கள், கிராம பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். இதற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 25 ஆயிரம் சிறுப்பாசன ஏரிகள், பஞ்சாயத்து குளங்களில் வடகிழக்கு பருவ மழை தண்ணீரை சேமித்து வைத்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டத்தை காப்பாற்ற முடியும்.

எனவே சிறுபாசன ஏரிகளிலும், குளங்களிலும் தண்ணீரை சேமித்து வைக்க வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மழைநீர் விவசாய நிலங்களில் தேங்கி நிற்காமல் இருக்கவும் போர்க்கால அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story