சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் ரங்கநாதன் தெருவில் ஏற்பட்டுள்ள தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து அப்பகுதியில் கரும்புகையாக காட்சி அளிக்கிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீ -யை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஷோபா டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது பற்றி தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.
Related Tags :
Next Story






