இருசக்கர வாகனத்திற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு - 5 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் ஓனம்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பாம்பை விரட்டும் முயற்சி பலனளிக்காததால், இது குறித்து அவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் பாம்பு பதுங்கியிருந்ததால், அதை வெளியே கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 5 மணி நேரமாக போராடி பாம்பை மீட்டனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்குள் தீயணைப்புத்துறையினர் விட்டனர்.
Related Tags :
Next Story






