பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வானவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து


பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வானவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
x
தினத்தந்தி 25 Jan 2026 5:49 PM IST (Updated: 25 Jan 2026 7:12 PM IST)
t-max-icont-min-icon

விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அனைவரும் பல சாதனைகள் புரிந்து உச்சம் தொட வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், குரும்பா ஓவியர் ஆர். கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் காளியப்ப கவுண்டர், மிருதங்க கலைஞர் பக்தவத்சலம் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் மேன்மேலும் பல சாதனைகள் புரிந்து உச்சம் தொட வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story