காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

1 More update

Next Story