அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு: பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - நீர்வளத்துறை

கோப்புப்படம்
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் வெள்ள நீர் திறக்கப்பட்டு போதுமான இடைவெளி பராமரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
தமிழக அரசின் நீர்வளத் துறையின் சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் முன்கூட்டியே வெள்ள நீர் திறக்கப்பட்டு போதுமான இடைவெளி பராமரிக்கப்பட்டு வருவதால், மிக கனமழை பெய்தாலும் வெள்ளநீர் திறப்பின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு அடையாறு மற்றும் கொசஸ்தலையாற்றில் பாதுகாப்பாக கடலை சென்றடையும். எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






