திருப்பத்தூரில் நடைபாலம் உடைந்து விபத்து - 10 பேர் காயம்

அதிக அளவிலான மக்கள் குவிந்ததால், பாலாறு பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாலம் உடைந்து விபத்து ஏற்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கொடையாஞ்சி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாலாறு பகுதியில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆடிப்பெருக்கு விழாவைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.
அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி கொடையாஞ்சி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இந்நிலையில், அதிக அளவிலான மக்கள் குவிந்ததால், பாலாறு பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாலம் உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாலம் உடைந்த இடத்தில் அவசர அவசரமாக மண் நிரப்பி சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story






