அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்


அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்
x

நிதி முறைகேடு புகார் தொடர்பாக சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பதவிகாலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்த வேல்ராஜ், இன்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இயந்திரவியல் துறையில் அவர் பணியாற்றியபோது எழுந்த நிதி முறைகேடு புகார் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு சஸ்பெண்ட் உத்தரவு நகல் வேல்ராஜிடம் வழங்கப்பட்டது. வேல்ராஜிடம் சஸ்பெண்ட் உத்தரவு நகலை பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் நேரில் வழங்கினார்.

1 More update

Next Story