பெயிண்டரை கல்லால் தாக்கி கொலை செய்த நண்பர் கைது: மதுபோதையில் வெறிச்செயல்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரும் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் நண்பர்கள் ஆவர்.
பெயிண்டரை கல்லால் தாக்கி கொலை செய்த நண்பர் கைது: மதுபோதையில் வெறிச்செயல்
Published on

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த முஹம்மது முஸ்தபா மகன் சாகுல்ஹமீது. ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்தவர் கன்னிராஜ் மகன் அதிமணி(எ) முஹம்மது அசன் (வயது 49). இவர்கள் இருவரும் நண்பர்கள், ஒன்றாக பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் சேர்ந்து உடன்குடி சந்தைக்கு காய்கறி வாங்க வந்துள்ளனர்.

காய்கறி வாங்கிவிட்டு செல்லும் வழியில், இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சாகுல்ஹமீது தலையில் ஹாலோ பிளாக் கல்லை போட்டு ஆதிமனி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்த தகவலின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதிமணி(எ) முஹம்மது அசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com