சென்னையில் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் இ-பெர்மிட் கட்டாயம்


சென்னையில் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு  இன்று முதல் இ-பெர்மிட் கட்டாயம்
x
தினத்தந்தி 28 April 2025 11:57 AM IST (Updated: 28 April 2025 12:09 PM IST)
t-max-icont-min-icon

அனுமதி இல்லாமல் எடுத்து சென்றால் அபராதமும் விதிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இ-பெர்மிட் நடைச்சீட்டு கட்டாயம் என அறிவிக்கபட்டிருந்த நிலையில், (இன்று ) முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் இடங்களில் அடித்தளம் அமைக்கும் போது கிடைக்கும் கனிமங்களை அப்புறப் படுத்துவதற்கு திங்கள் முதல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணையதளத்தில் விண்ணப்பித்து இ-பெர்மிட் பெற்ற பிறகே கனிமங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

விதிகளை மீறி அனுமதி இல்லாமல் எடுத்து சென்றால் வாகன உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதோடு, அபராதமும் விதிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

1 More update

Next Story