பாம்பன் பாலத்தில் சூறைக்காற்று: ரெயில்கள் நிறுத்தம்


பாம்பன் பாலத்தில் சூறைக்காற்று:  ரெயில்கள் நிறுத்தம்
x

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

ராமேஸ்வரம்,

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த தரை காற்று அவ்வப்பொழுது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் அயோத்தியாவில் இருந்து வந்த விரைவு ரெயில், பாதுகாப்பு கருதி மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. காற்றின் வேகம் குறைந்த பின் ரெயில் மீண்டும் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 More update

Next Story